search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போயிங் விமான விபத்து"

    போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
    பாரீஸ்:

    எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் உயிர் இழந்தனர். இதே ரக விமானம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

    5 மாதங்களில் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கியதால், நாடு முழுவதும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் விமானத்தின் முக்கியமான மென்பொருளில் குறைபாடு இருந்ததை போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டது.



    இந்த நிலையில், எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த நாடெஜ் டூபோஸ் சீக்ஸ் என்கிற பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,925 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரம்) இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    போயிங் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவின் சிகாகோ நகர கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    எத்தியோப்பியாவில் 157 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த போயிங் 737 விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. #Boeing737MAX8 #EthiopianFlightCrash #EthiopianFlight #EthiopianAirlinesblackbox
    அடிஸ் அபாபா:

    எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற  போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் நேற்று விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த 149 பயணிகள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர்.



    இந்நிலையில், துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் சிக்கிய அந்த விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக எத்தியோப்பியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பதிவாகியுள்ள விமானியின் உரையாடல்களை வைத்து விபத்துக்கான காரணம் என்ன? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #EthiopianFlightCrash #EthiopianFlight #EthiopianAirlinesblackbox 
    எத்தியோப்பியாவில் போயிங் விமான விபத்தில் ஐநா ஆலோசகர் உள்ளிட்ட 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #EthiopianAirlines #Boeing737MAX8 #EthiopianFlightCrash
    புதுடெல்லி:

    எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் நேற்று காலை 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது. வானில் உயர எழும்பிய அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்தது. இதனால் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
     
    பின்னர் நடந்த தேடுதல் வேட்டையில், தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கே உள்ள பிஷோஃப்டு என்ற நகரில் விமானம் விழுந்து கிடப்பது தெரியவந்தது. இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. 149 பயணிகள், விமானிகள் உள்பட 8 விமானப் பணியாளர்கள் என 157 பேர் உயிரிழந்தனர்.



    இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    விமான விபத்தில் இறந்த இந்தியர்களின் பெயர்களை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் வெளியிட்டார்.

    “இந்தியாவைச் சேர்ந்த வைத்திய பன்னகேஷ் பாஸ்கர், வைத்திய ஹன்சின் அன்னகேஷ், நுகவரபு மனிஷா மற்றும் ஷிகா கார்க் ஆகியோர் விமான விபத்தில் மரணம் அடைந்திருப்பதாக எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எனக்கு தகவல் தெரிவித்தனர்.
     
    இறந்தவர்களில் ஷிகா கார்க், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆலோசகர் என மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் உறுதி செய்துள்ளார். ஷிகா கார்க், நைரோபியில் நடைபெறும் ஐநா கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றபோது விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் கூறி உள்ளேன்” என சுஷ்மா குறிப்பிட்டார். #EthiopianAirlines #Boeing737MAX8 #EthiopianFlightCrash
     
    ×